டெஸ்ட் தொடருக்காக இந்திய புறப்பாட்டார் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஸ்டோக்ஸ்!

டெஸ்ட் தொடருக்காக இந்திய புறப்பாட்டார் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஸ்டோக்ஸ்!

Update: 2021-01-24 14:49 GMT

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தது பிசிசிஐ. இந்நிலையில் இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார். இதை தொடர்ந்து ஸ்டோக்ஸ் டிவிட்டரில் இந்தியாவிற்கு புறப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Similar News