முக்கிய வீரர்கள் இந்திய தொடரில் இடம் பெறாதது குறித்து இங்கிலாந்து அணி நீர்வாகம் விளக்கம்!

முக்கிய வீரர்கள் இந்திய தொடரில் இடம் பெறாதது குறித்து இங்கிலாந்து அணி நீர்வாகம் விளக்கம்!

Update: 2021-02-02 10:22 GMT

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது.

இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு எதிராக அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவுக்கு ஓய்வு வழங்கியிருப்பது அணிக்கு மிகிப்பெரிய இழப்பாக இருக்கும் என்று பலரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணி தேர்வு குழுவை முன்னாள் வீரர்களான கெவின் பீட்டர்சன், நாசர் ஹுசைன், மைக்கல் வாகன் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இதுகுறித்து தனது விளக்கத்தை கூறியிருக்கிறார். இதில் அவர் கூறியதாவது :“நாங்கள் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து சுழற்சி முறையை பின்பற்ற முடிவு எடுத்திருக்கிறோம்.

எங்கள் வீரர்களை நாங்கள் கவனிப்பதும் அவசியம். பிரச்சினைகள் வரும் முன் அதற்காக நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம். எங்கள் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். நீண்ட காலம் அணியில் நிலைத்து சிறப்பான விளையாட வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Similar News