ஐபிஎல் தொடர் நாயகன் விருதை தட்டிசென்ற இங்கிலாந்து அணி வீரர்.!

ஐபிஎல் தொடர் நாயகன் விருதை தட்டிசென்ற இங்கிலாந்து அணி வீரர்.!

Update: 2020-11-11 08:52 GMT

ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு அமிரக்ததில் மிகசிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது முதலில் களம் இறங்கிய டெல்லி அணியில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க டெல்லி அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை.

அதே போல் இறுதி போட்டியில் 156 என்ற எளிய இலக்கை வலுவான மும்பை அணிக்கு நிர்ணயித்தது டெல்லி அணி. அதை மும்பை எளிதில் அடித்து ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.

பின்னர் இந்த ஐபிஎல் தொடருக்கான சிறந்த வீரர்கள் பட்டியிலின் அடிப்படையில் விருதுகள் வழங்குவது ஐபிஎல் முறைபடி வழக்கம் அந்த வகையில் ஆண்டு தோறும் தொடர் நாயகன் விருது முக்கிய வீரர்களுக்கு சென்றடையும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தொடர் நாயகன் விருதை இறுதி போட்டியில் விளையாடத அணியில் இருந்த வீரருக்கு சென்றுள்ளது.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டுக்கான தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்ஆர்ச்சர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒற்றை வீரராக சிறப்பான பங்களிப்பை இந்தாண்டு வழங்கினார். அதை தொடர்ந்து இந்த விருது அவருக்கு சென்றுள்ளது.

Similar News