வெற்றி குறித்து வார்னர் கூறிய கருத்து.!
வெற்றி குறித்து வார்னர் கூறிய கருத்து.!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் அணியை பொருத்தவரையில் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் செல்ல முடியும் என்பதால் இந்த போட்டியை வெற்றே தீர வேண்டும் என களம் இறங்கியது. அதே போல் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய மும்பை அணியை திணர செய்தது ஐத்ராபாத் அணி. சந்திப் சர்மா ஹோல்டர் போன்ற வீரர்கள் சிறப்பான பந்து வீச்சின் மூலம் மும்பை அணியை தடுமாற செய்ய 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. மும்பை இன்டியன்ஸ் அணியில் அதிகபட்சமாக பெல்லார்ட் 41 மற்றும் சூரியக்குமார் 36 ரன்கள் அடிக்க 149 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : பஞ்சாப் அணிக்கு எதிரான எளிய இலக்கை துரத்த முடியாமல் நாங்கள் தோற்றதால் இன்றைய போட்டியின் சேசிங் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சில வீரர்களுக்கு அவர்கள் ஓய்வு எடுத்தும் இந்த மைதானத்தில் 150 ரன்கள் குவித்தது சிறப்பான ஒரு செயல். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினர்.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து எங்கள் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்து வெளியேறி வந்தாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறோம். எங்களது பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் சிறப்பாகவே பந்து வீசி வருகின்றனர். இந்த போட்டியிலும் எங்களுக்கு வெற்றிக்கான உத்வேகத்தை கொடுத்ததில் அவர்கள் தான் காரணம் மேலும் அடுத்த போட்டியிலும் இதே போன்று சிறப்பாக விளையாட இருக்கிறோம்.