மைதானத்தில் நுழைந்த ரசிகருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த கோலி!

இந்தியா, இலங்கை இடையில் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பலத்த பாதுகாப்பையும் மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்துவிட்டனர்.;

Update: 2022-03-14 03:43 GMT
மைதானத்தில் நுழைந்த ரசிகருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த கோலி!

இந்தியா, இலங்கை இடையில் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பலத்த பாதுகாப்பையும் மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்துவிட்டனர்.

அதாவது இலங்கை அணி 2வது இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் முகமது ஷமியின் பந்து வீச்சின்போது குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கோலி அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.

அதனை கவனித்த மூன்று ரசிகர்களும் தங்களின் நட்சத்திர வீரர் அருகில் பார்க்கின்ற வாய்ப்பை உணர்ந்து கொண்டனர். உடனடியாக பாதுகாப்பை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து விட்டனர். அதில் ஒரு ரசிகர் செல்போனில் போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என்று கோலியுடன் அனுமதி வாங்கினார். அதற்கு அவர் சம்மதித்து போட்டோ எடுத்துக்கொடுத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக சென்ற பாதுகாப்பு ஊழியர்கள் ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News