FIFA உலக கோப்பை தொடர் போட்டி: சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் மெஸ்ஸி!

கத்தாரில் FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி வென்றது.

Update: 2022-12-20 02:52 GMT

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடரை அர்ஜென்டினா அணி வென்றதை தொடர்ந்து பல்வேறு இந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக அர்ஜென்டினா அணியின் சிறந்த வீரரான மெஸ்ஸியுடன் தற்போது சச்சின் டெண்டுல்கர் அவர்கள் வெற்றிவாகை கூடிய தருணத்தில் ஒப்பீடு செய்து மகிழ்ந்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கால்பந்து உலக கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பான நடைபெற்ற இந்த போட்டியில் பெரிய கோஷங்களும் மகுடத்தை வென்றது அர்ஜென்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்து இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்ட் ஷீட் அவுட் முறையில் 4-2 என்று கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜென்டினா.


இந்த போட்டியில் அர்ஜென்டினா கோப்பை வெல்ல வேண்டும் என பல ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோஸ் மெஸ்ஸி வென்றுவிட வேண்டும்? தான் கடும் பிரார்த்தனையில் ரசிகர்கள் இருந்தார்கள். இதற்கு காரணம் மெஸ்ஸி விளையாடும் கடைசி உலக கோப்பை தொடராக இது இருப்பது தான். சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடி கட்டு பறக்கும் மெஸ்ஸிக்கு இந்த உலக கோப்பை சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்து இருக்கிறார்.


இந்த நிலையில், மெஸ்ஸியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உலக கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலக கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியது. அதேபோன்று சூழ்நிலையில் தான் மெஸ்ஸிக்கும் நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News