FIDE உலகக் கோப்பை போட்டி.. சிறப்பான ஆடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் பாராட்டு..
உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் என்று சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார். மேலும் இவருக்கு இந்திய முழுவதும் தற்போது பல்வேறு பாராட்டு செய்திகள் குவிந்து வருகிறது. ஃபிடே உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு, "ஃபிடே உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான செயல்பாட்டிற்காக நாம் பெருமையடைகிறோம்! அவர் தனது அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வலுவான மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான போட்டியை அளித்தார். இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சத்து 13 ஆயிரத்து 444 ஆகும். மேலும் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு 90 லட்சத்து 93 ஆயிரத்து 51 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சிறுவயதிலேயே இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது சாதனைதான் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் குறிப்பிடுகிறது.
Input & Image courtesy: News