20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்!

Update: 2022-06-26 13:10 GMT

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சியில் உள்ளது. இதற்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஜூன் 26) நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News