முன்னாள் சென்னை அணி வீரர் அனைத்து விதமான கிரிக்கெடில் இருந்து ஓய்வு அறிவிப்பு.!
முன்னாள் சென்னை அணி வீரர் அனைத்து விதமான கிரிக்கெடில் இருந்து ஓய்வு அறிவிப்பு.!
இந்திய அணியின் முத்த வேகபந்து வீச்சாளர் சுதீப் தியாகி அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் இப்போது உள்ள ரசிகர்களுக்கு இவர் கிரிக்கெட் வீரரா என ஆச்சியம் வரக்கூட இருக்கும். காரணம் இவர் கடந்த சில வருடங்களாக எந்தவொரு தொடரிலும் விளையாடவில்லை.
2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டி-20 போட்டியில் மூலம் இந்திய அணியில் அறிமுகமானர். அதன் பின்னர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அதில் 3 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதன் பின்னர் எந்த வாய்ப்பு கிடைகாத நிலையில் இந்திய அணிக்கு திரும்ப உள்ளுர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்து விளையாடினார். பின்னர் பெங்களுரு அணிக்காவும் விளையாடி உள்ளார். தற்பொழுது ஐபிஎல் தொடர்களிலும் இடம் கிடைகாத நிலையே உள்ளது.
உள்ளூர் போட்டிகளில் ரஞ்சி கோப்பையில் உத்திர பிரதேச அணிக்காக விளையாடினார். இதுவரை 41 உள்ளூர் போட்டிகளில் விளையாடிவுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரக்தியில் 33 வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் “தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முகமது கைஃப், ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் நன்றி. இந்த முடிவை மேற்கொண்டது கடினமானதுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும்” என்றார் சுதீப் தியாகி.