ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்வது நிச்சயம்: இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் நம்பிக்கை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. மகளிர் அணி 4வது இடத்தையும் தக்க வைத்தது.
இந்நிலையில், வருகின்ற 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி உச்சத்தை தொடும் என இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநரும், ஒடிசா ஆக்கி சம்மேளன இயக்குநருமான டேவிட் ஜான் கூறியுள்ளார்.
மேலும், அணியில் உள்ள ஜூனியர் ஆக்கி வீரர்கள் 2028ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டியில் பங்கேற்றிருப்பார்கள் எனவும் இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் அதிகமான அனுபவம் கிடைக்கும். இதனால் எவ்வித சூழ்நிலையும் சமாளிக்கின்ற பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள். எனவே வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் கட்டாயம் பதக்கத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar