தமிழக வீரர் நடராஜனை புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய வீரர்!
தமிழக வீரர் நடராஜனை புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய வீரர்!
ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, சில பவுலர்களின் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் பெற்ற நடராஜன், அந்த போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் நடராஜன்.
வருன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய டி.20 அணியில் இடம்பெற்ற நடராஜன் உமேஷ் யாதவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பும்ராஹ் உள்பட பல முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவ்வது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்ததுள்ளது.
நடராஜனும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து வருகிறார். தனது முதல் போட்டியிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி வருகிறார்.அந்தவகையில், நடராஜன் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஜாஹிர் கான், நடராஜன் எதிர்பார்த்ததை விட மிக அருமையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாஹிர் கான் பேசுகையில், “டெஸ்ட் தொடர் மிகுந்த சவால் நிறைந்தது. ஆனால் களமிறங்கிய முதல் நாளே நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டார். தனது முதல் நாளிலே இரண்டு விக்கெட் வீழ்த்தியது அவரது திறமையை காட்டியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே நடராஜன் தனது வேலையை மிக சரியாக செய்து கொடுத்துள்ளார். பல பந்துவீச்சாளர்கள் காயமடைந்ததால் தான் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது என்றாலும் அவர் தனது வேலையை மிகசரியாக செய்துள்ளார் என்பது உண்மை” என்று தெரிவித்துள்ளார்.