சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் டுப் ப்ளஸிஸ் ஓய்வு அறிவிப்பு.!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் டுப் ப்ளஸிஸ் ஓய்வு அறிவிப்பு.!

Update: 2021-02-17 12:14 GMT

தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக கடந்த 2019 ஆண்டு உலகக்கோப்பை தொடரை தன் தலைமையில் எதிர்கொண்டார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தோற்ற நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று வீதமான போட்டிகளிலும் விளையாடி வந்த பாப் டுப் ப்ளஸிஸ் கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 199 ரன்கள் வீளாசி அசத்தினார். 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது‌. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி முத்த வீரரான பாப் டுப் ப்ளஸிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

அவர் வெளியிட்டுள்ளஓய்வு அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு டி-20 உலககோப்பை தொடர்கள்நடைபெற உள்ளதாகவும் எனவே டி-20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாட உள்ளதாக கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Similar News