இலங்கை அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவிற்கு தகுதியான வீரர்கள் இல்லை - முன்னாள் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஓபன் டாக்!
இலங்கை அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவிற்கு தகுதியான வீரர்கள் இல்லை - முன்னாள் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஓபன் டாக்!
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.அதில் பங்கெடுத்த அணிகள் தங்கள் கை வசம் இருந்த இருப்பு தொகையை கொண்டு அதற்கேற்ப வீரர்களை வாங்கினர்.இந்த ஏலத்தில் பெரும்பாலும் அணிகள் பாஸ்ட் பவுலர்களையே குறி வைத்தது.
பாஸ்ட் பவுலர்களே அதிக தொகைக்கு ஏலம் போகினர்.கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் அணி 16.25 கோடிக்கு வாங்கியது. கைல் ஜேமிசனை பெங்களூரு 15 கோடிக்கு வாங்கியது. ஜய் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கும் ரிலே மெரடித்தை 8 கோடிக்கும் பஞ்சாப் வாங்கியது.குல்டர்நைலை 5 கோடிக்கும் மிலினேவை 3.2 கோடிக்கும் மும்பை வாங்கியது.இப்படி வெவ்வேறு வெளிநாட்டு வீரர்கள் பெரும் தொகைக்கும் ஏலம் போன பொழுதில் ஸ்ரீ லங்காவில் இருந்து ஒரு வீரர் கூட ஏலம் போகவில்லை.இது ரசிகர்களிடையே பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.