பாகிஸ்தான் அணியின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்து நான்காவது இரட்டை சதம் வீளாசிய வில்லிய்மசன்!

பாகிஸ்தான் அணியின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்து நான்காவது இரட்டை சதம் வீளாசிய வில்லிய்மசன்!

Update: 2021-01-05 15:22 GMT

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஆஷார் அலி 93 ரன்களும் கேப்டன் ரிஸ்வான் 61 ரன்களும் அடிக்க பாஷிம் அஸ்ரம் 48 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

இதை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடி நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வலுவான நிலையை எட்டியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வில்லியம்சன் சதம் வீளாசிய நிலையில்  மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இரட்டை சதம் வீளாசி அசத்தினார்.

இது அவரது நான்காவது இரட்டை சதம் ஆகும். அவரை தொடர்ந்து நிக்கோலஸ் சதம் வீளாச பின்னர் டெவிட் மிட்செலும் சதம் வீளாசி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தனர். இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 659-6 ரன்கள் அடித்து டிக்ளெர் செய்தது. பாகிஸ்தான் அணியை விட நியூசிலாந்து அணி 362 ரன்கள் சேர்த்தது. 

Similar News