இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தனது 11-ஐ வெளியிட்ட கவுதம் கம்பீர்!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தனது 11-ஐ வெளியிட்ட கவுதம் கம்பீர்!

Update: 2020-12-23 10:56 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிரமாண்டமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17 ம் தேதி அடிலெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த  டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 


இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக அஜிங்கே ரஹானே வழி நடத்த உள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல மாற்றங்களுடன் களம் இறங்க உள்ளது. பிரித்திவ் ஷா மற்றும் சாஹா போன்ற வீரர்கள் கழட்டி விடப்பட உள்ளனர்.

அவருக்களுக்கு பதிலாக சுக்மன் கில் மற்றும் பண்ட் இருவரும் அணியில் இணைவர் என எதிர்பார்க்கபடுகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்  இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ளார். கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக சுப்மன் கில்லும், மாயன்க் அகர்வாலும் இடம்பெற்றுள்ளனர்.

முதல் போட்டியில் சொதப்பிய ப்ரித்வி ஷாவை கவுதம் கம்பீர் தனது அணியில் எடுக்கவில்லை. அதே போல் விராட் கோலியின் இடத்தில் கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ள கம்பீர் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வினை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

கவுதம் கம்பீர் தேர்வு செய்த 11:
சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே (கேப்டன்), கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், நவ்தீப் சைனி/ முகமது சிராஜ்.

Similar News