ஒலிம்பிக்: மழையால் போட்டி நிறுத்தம் !
ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் அதிதி அஷோக் பங்கேற்ற மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் போட்டி மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் அதிதி அஷோக் பங்கேற்ற மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் போட்டி மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி நாளை வரை நடைபெற உள்ள நிலையில், டோக்கியோ நகரில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வானிலை மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஒலிம்பிக் தொடரின் கோல்ஃப் ரவுண்டு 4வது ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக், கோல்ஃப் போட்டியில் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒன்று வாங்க வாய்ப்பு உள்ளது. முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதால் அதிதி அசோக் பதக்கம் வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிதி அஷோக் பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் போட்டி எப்போது என்பன விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Lpga
https://www.puthiyathalaimurai.com/newsview/112157/India-s-Aditi-Ashok-individual-golf-tournament-at-the-Olympics-has-been-suspended-due-to-inclement-weather