மீண்டும் கோலியா! ரோஹித்தா! என்ற சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்.!

வீராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க வேண்டும் என 2019 உலககோப்பை தொடருக்கு பிறகே பல கருத்துகள் எழுந்தது. ஆனால் வீராட் கோலியே தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் கேப்டன் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீண்டும் ரோஹித் கோப்பையை வென்று தன்னை சிறந்த கேப்டன் என்பதை நீருபித்துள்ளார். இது வீராட் கோலிக்கு பெரிய தலை வலியை கொடுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர் கம்பீர் ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என கூறிவந்த நிலையில் தற்பொழுது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோய்ப் அக்தர் இதை கருத்து கூறியுள்ளார்.
அவர் தெரிவித்த கருத்தாவது, “விராட் கோலி இந்திய அணியை பல முறை சிறப்பாக வழி நடத்திச் சென்றிருக்கிறார். அதை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். ஆனால் சுமார் 2010-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து விளையாடி வரும் அவர் சில காலங்களிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அதிக பாரத்துடன் இருக்கிறார் என நான் உணருகிறேன். அவரது பாரத்தை குறைப்பதற்காக குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும். இது விராட் கோலிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஐபிஎல் தொடர் மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்திருக்கிறார். தனது கேப்டன் பொறுப்பு சிறந்தது எனவும் ஒவ்வொரு முறை சுட்டிக்காட்டி வருகிறார்.
வருகிற ஆஸ்திரேலிய தொடரில் கேப்டன் பொறுப்பு கிடைத்திருந்தால் தன்னை நிரூபித்து காட்டுவதற்கு சரியான வாய்ப்பாக அவருக்கு அமைந்திருக்கும். இதை நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கேப்டன் பொறுப்பில் காண்பதற்காக ஆர்வமாக இருக்கின்றனர். இதனை அணி நிர்வாகம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்.” என பதிவு செய்திருந்தார்.