ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகளா? கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரசு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-11-16 06:44 GMT

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரசு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக கோப்பை போட்டிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், துபாயில் இருந்து பாண்ட்யா இந்தியா திரும்பினார். அவரை மும்பை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் இல்லாமல் 2 வாட்சுகள் இருந்ததாகவும், ரூ.5 கோடி மதிப்புள்ள அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தரப்பில் இருந்து விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. பாண்ட்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து வகையிலான பொருட்கள் குறித்தும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் செலுத்த வேண்டிய வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதற்கான பணத்தை செலுத்தவும் நான் உறுதி கூறியுள்ளேன். அது மட்டுமின்றி என்னுடைய கடிகாரத்தின் விலை ரூ.5 கோடி என்று சமூக வலைதளங்கள் மூலமாக பரவி வருகிறது. ஆனால் அதன் மதிப்பு ரூ.1.5 கோடி மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News