“ கடந்த முறை அடைந்த தோல்வி நினைத்தால் வெறுப்பு வருகிறது” - டிம் பெயின்.!

“ கடந்த முறை அடைந்த தோல்வி நினைத்தால் வெறுப்பு வருகிறது” - டிம் பெயின்.!

Update: 2020-11-24 15:31 GMT


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான தொடர் தான் தற்பொழுது கிரிக்கெட் வட்டரத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள தொடர் ஆகும். இந்த தொடருக்காக இந்திய அணி ஐபிஎல் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று திவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றுபயணத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் உள்ளன. மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். 


கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது. இது குறித்து தற்பொழுது பேசியுள்ளார் ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெயின்.

இது குறித்து பேசிய பெயின் இந்தியாவுக்கு எதிராக கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலும் இப்போது அந்த தோல்வியை நினைத்தால் கூட எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி கடந்த முறை நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் மோசமானது என்றும் தெரிவித்துள்ளது.

Similar News