ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் வார்னரை விட இவர் தான் இந்திய அணிக்கு தலைவலி - கே.எல். ராகுல் வெளிபடை பதில்.!

ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் வார்னரை விட இவர் தான் இந்திய அணிக்கு தலைவலி - கே.எல். ராகுல் வெளிபடை பதில்.!

Update: 2020-11-27 11:24 GMT


இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிர பயற்சியில் இருந்து வந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி 1992 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் இந்திய அணி பயன்படுத்திய ஜெர்சியை இந்த தொடரில் அணிந்து விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொரோனா தொற்றிற்கு பிறகு முதல் முறையாக ரசிகர்கள் 25% இருக்கையில் இருந்து பார்க்க அனுமதித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.


இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியை பற்றி கே.எல். ராகுலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதுகுறித்து அவர் கூறுகையில் : கொரோனா வருவத்திற்கு முன்பாக நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 14-15 மாதங்களாக தொடர்ந்து அதிக ரன்களைக் குவித்து பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் மார்னஸ் லபுச்சனே. இவரை தெரியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரை சமாளிக்க பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர் இவர்கள் அத்தனை திட்டங்களையும் நிச்சயம் வைத்திருப்பர். இருப்பினும் இவர் இந்திய அணிக்கு தலைவலியாக அமைவார்.” என்று ராகுல் கூறினார். மார்னஸ் லபுச்சனே இதுவரை ஆடிய 14 டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 1500 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

Similar News