41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம். இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் வாழ்த்து !

இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த 41 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது உலகளவில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

Update: 2021-08-05 08:59 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 54 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளது.   

இந்திய ஆண்கள் ஹாக்கி  அணி கடந்த 41 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது உலகளவில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் வென்றது இது ஆகும். இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கி கடந்த 1980ம் ஆண்டுக்கு பின்னர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை வென்று இந்திய ஆக்கி அணி சாதித்துள்ளது. 

வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு இந்திய பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: வரலாற்று ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஹாக்கி  அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம் நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வெற்றி பெற்று வரலாறு படைத்த இந்திய ஹாக்கி  அணிக்கு வாழ்த்துக்கள்.ஹாக்கி அணி பெற்ற வெற்றி புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இந்திய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dailythanthi

Image Courtesy: Ndtv

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/05093342/Historic-A-day-that-will-be-etched-in-the-memory-of.vpf

Tags:    

Similar News