இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் தனது மகனுடன் இமாசலபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) காலை அவரது உயிர் பிரிந்தது.
Saddened by the passing away of noted Hockey player, Shri Charanjit Singh. He played a key role in the successes of the Indian Hockey Team, most notably in the Rome and Tokyo Olympics in the 1960's. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 27, 2022
இந்நிலையில், பிரதமர் மோடி சரண்ஜித் சிங் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 'பிரபல ஆக்கி வீரர் சரண்ஜித் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இந்திய ஆக்கி அணியின் வெற்றிகளுக்காக அதிகமான பங்களிப்பை அளித்தவர். அதிலும் ரோம் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Dailyindia.net