"இந்த வீரர் விரைவில் இந்திய அணியில் விளையாட நான் வாய்ப்பு கொடுப்பேன்" - கங்குலி அறிவிப்பு
"இந்த வீரர் விரைவில் இந்திய அணியில் விளையாட நான் வாய்ப்பு கொடுப்பேன்" - கங்குலி அறிவிப்பு
இந்த ஐபிஎல் தொடரில் வழக்கத்தை விட அதிக அளவில் இளம் இந்திய வீரர்களின் பங்களிப்பு இருந்தது. குறிப்பாக ஆர்சிபி அணியில் இடம்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் தேவ்தெத் படிக்கல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனின் பெங்களுரு அணிக்காக முதல் லீக் போட்டியில் இருந்து விளையாடி வருகின்றார். முதல் போட்டியிலேயே அரைசதம் வீளாசி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
சமிபத்தில் கங்குலி வெளியிட்ட அவருக்கு பிடித்த ஆறு வீரர்களின் பட்டியலில் கூட தேவ்தேத் படிக்கல் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனில் பெங்களுரு அணிக்காக 450+ ஸ்கோரை அடித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த இளம் இந்திய வீரர் என்ற விருதை பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சமிபத்தில் கங்குலி ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் தேத்தெத் படிக்கல் குறித்து பேசியுள்ளார்.
இதைப்பற்றி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பது ” படிக்கல் திறமையான வீரர். ஈடன்கார்டனில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு வங்கத்திற்கு எதிராக அவர் வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டார். டி20 போட்டி என்பது முதல் கட்டம் தான் இன்னும் சில சீசன்களில் செல்லட்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
நடப்பு ஐபிஎல் இல் விளையாண்ட வருன் சக்ரவர்த்தி நடராஜன் போன்ற பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்குலி வாயில் இருந்தே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதால் விரைவில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.