பெண்கள் உலகக்கோப்பை கனவு அணி அறிவிப்பு: இந்தியர்கள் இடம் பிடிக்காதது ஏன்?
2022ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள், வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணியில் ஒருவரும் இடம் பிடித்துள்ளனர்.
இதில் கேப்டனாக ஆஸ்திரேலியா வீராங்கனை லனிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா, மற்றும் பாகிஸ்தான் அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஐசிசியின் கனவு அணியில் இடம் பிடித்துள்ள வீராங்கனைகள் பெயர் விவரம் காண்போம்.
ஆஸ்திரேலியா வீராங்கனைகள், அலிசா ஹீலி, மெக் லானிங், கேப்டன், ரேச்சல் ஹெய்ன்ஸ், பெத் மூனி உள்ளிட்டோர் ஆவார். அதே போன்று இங்கிலாந்தை சேர்ந்த நாட் ஸ்கிவர், ஹேலி மேத்யூஸ் வெஸ்ட் இண்டீஸ், மரிசான் கேப், தென்னாப்பிரிக்கா, சோஃபி எக்லெஸ்டோன் இங்கிலாந்து, ஷப்னிம் இஸ்மாயில் தென்னாப்பிரிக்கா, சல்மா காதுன் வங்காளதேசம், சார்லி டீன் இங்கிலாந்து.
Source, Image Courtesy: Maalaimalar