இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் இந்த செயலால் ஐசிசி அபதாரம் விதிப்பு!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் இந்த செயலால் ஐசிசி அபதாரம் விதிப்பு!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் போட்டியை இழந்துவிட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துவிட்டது.
தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களில் தங்களது அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்தது.
இதன் பிறகு வெறித்தனமாக களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்ன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவரிலேயே தங்களது வெற்றியை நிலைநாட்டியது. தற்போது இரண்டு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருக்கிறது. இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் ஐசிசி 40 சதவீதம் அபராதம் விதித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளில் இருந்து நான்கை குறைத்துள்ளது.