இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமானது: ICC போட்டி நடுவர் கருத்தால் பரபரப்பு!
இந்தியாவின் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று ஐ.சி.சி போட்டி நடுவர் அறிக்கை கொடுத்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்தூரில் உள்ள மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக மூன்றாவது டெஸ்ட் போட்டி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இடைவேளைக்கு பிறகு தற்பொழுது சர்ச்சையான முடிவு வெளிவந்து இருக்கிறது. குறிப்பாக முதல் நாளில் 14 விக்கெட்டுகளையும், இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகளையும், மூன்றாவது நாளில் ஒரு விக்கெட்டும் சரிந்தனை. இவற்றின் 26 விக்கெட் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உரித்தானது.
தற்போது போட்டி முடிந்ததும் இரு அணியின் கேப்டன்கள் நடுவர்களுடன் ஆலோசித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவர் கிரிஸ் பிராட் ஆடுகளம் குறித்த தன்னுடைய மதிப்பீட்டை தற்பொழுது கொடுத்து இருக்கிறார். குறிப்பாக இவர் கொடுத்த அறிக்கையில் இந்தூர் மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஆடுகளும் மிகவும் வறண்டு காணப்படுகிறது, இது பந்துக்கும் பெட்டிற்கும் சரி சமமான போட்டியை கொடுக்கும் வகையில் இல்லை.
தொடக்கத்தில் இருந்து ஆடுகளும் சிலர் பந்து வீச்சாளர்களுக்கு முற்றிலும் சாதகமாக இருந்தது ஆடுகளத்தில் வீசப்பட்ட ஐந்தாவது பந்துகளில் ஆடுகளத்தின் மேற்பரப்பு சிதைந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முற்றிலும் ஆட்டம் மறுக்கப்பட்டதாக காணப்படுகிறது. அத்துடன் ஆடுகளத்தின் மீது நடவடிக்கையாக மூன்று மதிப்பு இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் 14 நாட்களுக்குள் அப்பிள் செய்யலாம், ஒரு மைதானம் 5 ஆண்டுகளுக்குள் ஐந்து அல்லது அதற்கு மேல் தகுதி இழப்பு புள்ளியை பெரும் பட்சத்தில் அந்த மைதானம் ஓராண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Sports News