ஐசிசி டி-20 தரவரிசை பட்டியல் வெளியீடு இந்தியா அணி வீரர் முன்னேற்றம்.!

ஐசிசி டி-20 தரவரிசை பட்டியல் வெளியீடு இந்தியா அணி வீரர் முன்னேற்றம்.!

Update: 2020-12-10 13:19 GMT

சர்வதேச கிரிக்கெட்டின் டி-20 போட்டிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது ஐசிசி. இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வெல்ல இந்திய அணி டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. தற்பொழுது டி-20 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் படி இந்திய அணியின் சார்பில் கே.எல் ராகுல் ஐசிசி டி-20 தரவரிசை பேட்மேன்கன் பட்டியிலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி 8 வது இடத்தில் உள்ளார்.

இவர்களை தவிர வேற எந்த வீரரும் முதல் 10 இடங்களில் இடம் பெறவில்லை. ஐசிசி டி-20 பேட்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலனும் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாமும் உள்ளனர். 

அதே போல் பந்து வீச்சில் இந்திய அணியின் எந்த வீரரும் முதல் பத்து இடத்தில் இடம் பிடிக்கவில்லை. வாசிங்டன் சுந்தர் 10 இடங்கள் முன்னேரி 11 வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா நான்காவது இடத்திற்கு முன்னேற முதல் இடத்தில் ஆப்கானிஷ்தான் அணியின் ரஷித் கானும் இரண்டாவது இடத்தில் முஸ்புர் ரஹ்மான் உள்ளனர். 

Similar News