மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்!

Update: 2022-03-19 10:28 GMT
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்!

12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவின்போது புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை தொடங்கி உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: Scroll.in

Tags:    

Similar News