முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றால் கோலி மீது தான் காரணம் வரும் முன்னாள் வீரர் கருத்து.!
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றால் கோலி மீது தான் காரணம் வரும் முன்னாள் வீரர் கருத்து.!
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தாற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படிநேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 263 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றனர். விராட் கோலி இந்த இங்கிலாந்து தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டும். இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஆபத்தும் கூட என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.
இதில்பேசிய அவர் : ரஹானே தலைமையில் செயல்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கிறது. சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விட்டால் விராட் கோலி மீது பல்வேறு அழுத்தங்கள் ஏற்படும்.ஒருவேளை சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் அது இங்கிலாந்து அணி ஆபத்தாகிவிடும். இதனால் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.