டி20 போட்டியில் 100வது வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது.

Update: 2022-02-19 02:23 GMT

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்து அசத்தினர். அவர்களுக்கு அடுத்து விளையாட ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்திருந்தது.

இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 தொடரையும் கைப்பற்றியது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்கின்ற சிறப்பை பெற்று அசத்தியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News