டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் நிலையில் இரண்டு அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2021-10-24 02:45 GMT
டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை: ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் நிலையில் இரண்டு அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டி பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பலமுறை வெற்றி பெற்றிருந்தாலும், தற்போதைய மாற்றங்களால் பாகிஸ்தானை எளிதாக கருத முடியாது என்றார்.

மேலும், இந்திய அணியில் உள்ள ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களின் உடல் தகுதியில் பின்னடைவு உள்ள நிலையில், பந்து வீச்சுக்கு ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருவதாகவும் கோலி கூறினார். இதனால் இன்று நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதால் இரண்டு நாட்டு ரசிகர்ளும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Ndtv


Tags:    

Similar News