டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்!

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Update: 2021-10-18 06:31 GMT

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று (அக்டோபர் 17) முதல் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகின்ற 24ம் தேதி சந்திக்கிறது.

இதனிடையே லீக் ஆட்டங்களுக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்தியேலியாவுக்கு எதிராகவும் நடைபெறும் நிலையில், இன்று முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News