இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் மாற்றம்: அதிகார பூர்வமான அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் மற்றும் கிரிக்கெட் போட்டி இமாச்சல் பிரதேச மாநில தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இருந்து ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மைதானத்தில் சீரமைக்கப்பட அவுட் பில்டிங் புல் சரியாக முளைக்காததால் சர்வதேச போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என்றும், எனவே இந்த போட்டிகள் வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றப்படும் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
எனவே இந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்றுவதாக தற்போது நடக்க உள்ள 3வது டெஸ்ட் போட்டி இடமாற்றம் குறித்து இன்றைய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இமாச்சல் நடைபெற இருந்த மைதானத்தில் நடைபெற இருந்த கிரிக்கெட் தற்பொழுது இந்தூர்மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மற்றொரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
மேலும் இமாச்சல் பிரதேசத்தில் தற்போது நிலவும் கடுமையான குளிர் காரணமாக மைதான அவுட் பில்டிங் புல் போதுமான அளவிற்கு அடர்த்தியாக வளரவில்லை. புல்கள் வளர்வதற்கு சில காலம் தேவைப்படுகிறது. எனவே மாற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அத்துடன் அதிகமான இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் அற்புதமாக விளையாடி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News