இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர்: முதல் முறையாக கண்டுகளிக்கும் இரு நாட்டு பிரதமர்கள்!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை தற்பொழுது இரண்டு நாட்டு பிரதமர்களும் கண்டு களித்து வருகிறார்கள்.

Update: 2023-03-10 01:20 GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் தொடர்கள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தது, மூன்றாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் தற்பொழுது இந்தியா இருந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் தான் இந்தியாவிற்கு முக்கிய அம்சமாக இருக்கும். ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று ஆக வேண்டும். அப்பொழுது தான் இந்திய அணியால் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக இந்தியா தோல்வியை தழுவினால் இலங்கை நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


இதனுடைய தரப்பொழுது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என இரண்டு நாட்டு பிரதமர்களும் இந்த போட்டியை தற்பொழுது கண்டுக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆன அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பயனாளர்கள் கண்டு களிக்கும் வசதியை கொண்டு இருக்கிறது.


இந்த டெஸ்ட் தொடர் முதல் நாள் ஆட்டத்தை ஏறக்குறைய ஒரு லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து இருப்பார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். இரண்டு நாட்டுப் பிரதமர்களின் வருகைக்காக பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் பேட்டரி கார் மூலமாக மைதானத்தை சுற்றி ரசிகர்களுக்கு உற்சாகம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News