உலக கோப்பை தொடர்: நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதல்!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா இன்று மோத இருக்கிறது.

Update: 2022-10-27 08:42 GMT

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்று இந்திய அணி குரூப் 2 அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானில் கடைசி பந்தில் தோற்கடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி. அடுத்தது நெதர்லாந்து அணியுடன் இன்று முதல்முறையாக மோத இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான ஆட்டத்தில் 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி பிரமாதமான பேட்டிங்கால் இறுதி வெற்றியை வசப்படுத்தியது.


இனி இந்திய அணி நெருக்கடி இன்றி விளையாடலாம். அதுவும் நெதர்லாந்து குட்டி அணி என்பதால் அதிக சிரமத்தை எடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஆனாலும் ரவுண்ட் நோட் அவசியம் என்பதால் பெரிய வித்தியாசத்தில் வெற்றியை ஈட்ட வேண்டிய நமது வீரர்கள் கவனம் செலுத்துவார்கள். தனது கடைசி ஐந்து ஆட்டங்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரோகித் சர்மா பழைய நிலைக்கு திரும்புவதற்கு இந்த ஆட்டம் அருமையானதான வாய்ப்பு ஆகும்.


சாதனையின் விளிம்பில் உள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்னும் 73 ரன்கள் எடுத்தல் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பை போட்டியில் ஆயிரம் ரன்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். அதே சமயத்தில் மைதானத்தில் தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நியூசிலாந்தின் 200 ரன்கள் குவித்தது. எனவே இந்திய அணியும் ரன்மலை பொழியும் என்று நம்பலாம்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News