உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (மார்ச் 10) ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.

Update: 2022-03-09 14:35 GMT

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (மார்ச் 10) ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும, அதே போன்று சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத உள்ளது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் நேருக்கு நேராக மோதியுள்ளது. 32 போட்டியில் நியூசிலாந்தும், 20ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் 'டை'யானது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: Twiter

Tags:    

Similar News