ஜடேஜாவை பாராட்டிய அஸ்வின்! எதற்கு தெரியுமா?

Update: 2022-03-07 11:43 GMT
ஜடேஜாவை பாராட்டிய அஸ்வின்! எதற்கு தெரியுமா?

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. அதில் இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

அதே போன்று முதல் இன்னிங்சில் 175 ரன்கள் விளாசிய ஜடேஜா, 5 விக்கெட்டுகளை எடுத்தார். 2வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார். இதனால் சர்வதேச போட்டியில் இந்த ஆறு விக்கெட்டுடன் 436 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிகமான விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.

மொகாலி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, ஜயந்த் யாதவ் என்ற மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும், முதலில் பந்து வீச விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் பெருந்தன்மையை அற்வினை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: Times Of India

Tags:    

Similar News