இந்தியா விளையாடும் ஒரு நாள் போட்டியை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியை நேரில் பார்ப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருக்கிறார்.

Update: 2023-03-18 01:52 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே மோதும் ஒரு நாள் டெஸ்ட் தொடர் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்க் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் முதலில் களம் இறங்கி விளையாட தொடங்கியது. முதல் நாள் மைதானத்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து இருந்தார்.


குறிப்பாக மும்பையில் நடைபெற்ற இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கும் தகவல் தமிழக ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் இணைந்த அவருடன் போட்டியை நேரில் கண்டு களித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக மும்பையில் இருக்கும் தமிழ் மக்கள் ரஜினி அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.


இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தது நாலோ என்னவோ தெரியவில்லை இந்திய அணி அபாரமாக தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியா அணியின் போட்டியில் எதிர்கொள்ள முடியாமல் திக்கு முக்காடியது. இந்தியாவின் பந்துவீச்சும் அருமையாக இருந்தது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மைதானத்தில் கரகோசங்கள் எழும்பியவாறு இருந்தார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News