ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி: தங்கம் வென்று புதிய சாதனை படைக்குமா ?

ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது.

Update: 2021-08-02 09:13 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் தற்போது வரை இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு  வெள்ளி பதக்கத்தையும் மற்றும் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார் . இந்த நிலையில் தற்போது பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி இருப்பது, இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பை உறுதி படுத்தியுள்ளது. 


இன்று பெண்களுக்கான ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் தொடக்கம் முதல் இரண்டு அணிகளும் மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளிகள் எதுவும் எடுக்காமல் சமமாக இருந்தனர். இரு அணிகளும் ஒருவரை ஒருவர் கோல் அடிக்க விடாமல் தடுத்து மிகவும் விறுவிறுப்பாக விளையாடினர். 


அப்போது ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இந்தியாவை சேர்ந்த குர்ஜிட் கவுர் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு ஒரு கோல் அடித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த அரையிறுதியில் இந்தியா அர்ஜென்டினா உடன் மோதுகிறது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதி போட்டி வரை சென்று, அதில் வெற்றிபெற்று தங்க பதக்கத்தை வென்று புதிய வரலாற்று சாதனை படைக்குமா என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source:Hockey India

Image Courtesy: Hockey India

Tags:    

Similar News