டி20 போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா!

Update: 2022-07-10 09:02 GMT

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலாவதாக விளையாடி இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. நிதானமாக ரவீந்திர ஜடேஜா விளையாடி 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர்.

இதன் பின்னர் இங்கிலாந்து சார்பாக ஜோர்டான் 4 விக்கெட்டும், கிலீசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியை சேர்ந்தவர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் முன்னணி வீரர்கள் அவுட்டாகி வெளியேறினர்.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவாக அவுட்டாகினர். கடைசியில் டேவிட் வில்லி அதிரடியாக விளையாடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இறுதியாக இங்கிலாந்து அணி 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டி20 தொடரை 20 என்று இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News