நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்தியா 'ஏ' அணியில் விளையாட அனுமதி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா ஆகியோர்களுக்கு தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியா ஏ அணியில் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-13 06:04 GMT
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்தியா ஏ அணியில் விளையாட அனுமதி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா ஆகியோர்களுக்கு தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியா ஏ அணியில் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்தியா ஏ அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 23ம் தேதி புளோயம்போன்டீனில் துவங்குகிறது. இதில் இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அணியில் இடம் கிடைக்காத விஹாரி, பிரித்வி, அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோரும் ஏ அணியில் இடம் பெற உள்ளனர். மேலும், பாபா அபராஜித்தும் இணைய உள்ளார். அணியில் விளையாட உள்ளவர்கள் விவரம் வருமாறு: பிரியங்க் பாஞ்ச்சால் கேப்டனாக இருப்பார். ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், சர்பராஸ்கான், பாபா அபராஜித், உபேந்திரா யாதவர், கே.கவுதம், ராகுல் சாஹர், சவுரப் குமார், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், இஷான் போரெல், அர்ஸன் நக்வாஸ்வாலா உள்ளிட்டோர் இடம் பெற உள்ளனர்.

Source: Dinakaran

Image Courtesy: The News Minute


Tags:    

Similar News