இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நீக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நீக்கம்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் ரோகித் ஷர்மா, ஷீப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், சஹா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, சிராஜ், தாகூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஷார் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த போட்டியில் தற்போதைய கேப்டன் ரஹானே நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கோலி மீண்டும் கேப்டன் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு ரஹானேவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். தற்போது ரசிகர்களுக்கு இது சோகமான செய்தியாக அமைந்திருக்கும். இருந்தாலும் அவர் மீண்டும் அணியில் விளையாடுகிறார் என்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.