பிரதமர் முதல் கிரிக்கெட் ரசிகன் வரை வாழ்த்து மழையில் இந்திய கிரிக்கெட் அணி!

பிரதமர் முதல் கிரிக்கெட் ரசிகன் வரை வாழ்த்து மழையில் இந்திய கிரிக்கெட் அணி!

Update: 2021-01-19 14:13 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 369 ரன்கள் அடித்த நிலையில் பின்னர் விளையாடிய இந்திய அணி 336 ரன்கள் அடித்தது.

முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் மற்றும் வார்னின் ஆட்டத்தால் 294 ரன்கள் அடித்தது.

இந்திய அணிக்கு 327 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா அணி. இந்திய அணியில் ரோஹித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்ற பின்னர் சுக்மன் கில் மற்றும் பஜாரா இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பியது.

அதிரடியாக விளையாடிய கில் 91 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த ரஹானே 24 ரன்னில் அவுட் ஆக புஜாரா 56 ரன்கள் அடித்து நிலைத்து விளையாடி வந்த நிலையில் அவரும் அவுட் ஆக இந்திய அணி தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து விளையாட இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ரிஷப் பண்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 89 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியை அனைவரும் வாழத்து தெரிவித்து கொண்டடுகின்றனர். இந்திய அணி வாழ்த்து மழையில் உள்ளது. பிரிஸ்பென் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழத்துவது மிகவும் கடினம் என சொல்லப்பட்ட நிலையில் இந்திய அணி செய்து காட்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் சுந்தர் பிச்சை போன்ற பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News