MS தோனியை மிஸ் பண்ணுகிறதா இந்திய கிரிக்கெட் அணி??

MS தோனியை மிஸ் பண்ணுகிறதா இந்திய கிரிக்கெட் அணி??

Update: 2020-12-01 19:27 GMT

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 தொடர் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற தொடரை வென்று உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுவது இந்திய அணியின் பந்து வீச்சு தான்.

இரண்டு போட்டிகளிலும் முதல் விக்கெட்டை வீழத்தவே இந்திய பவுலர்கள் தடுமாறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாத நிலை தான் ஏற்படும். இந்திய அணியில் கோலியின் தலைமை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் தற்பொழுது கீப்பிங்கில் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

இந்திய அணிக்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விளையாடிய தோனி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. தற்போழுது கீப்பிங் செய்து வரும் கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற அறிவுரை வழங்குவதில்லை. தோனி இருக்கும் பொழுது அனைத்து வீரர்களிடமும் பேசுவார். இந்த நிலை தான் தற்பொழுது இந்திய அணியை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

Similar News