'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனம் போட்ட கிரிக்கெட் அணி வீராங்கனைகள்.!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் பட்டித்தொட்டி எங்கும் வைரலாகியது.
இந்நிலையில், இப்படத்தின் பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கணைகள் நடனம் ஆடியுள்ளனர். இதில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வெறித்தனமாக ஆடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, திவ்யா, வனிதா ஆகான்ஷா உள்ளிட்ட வீராங்கனைகள் நடனம் ஆடியுள்ளனர்.