ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் ரவிக்குமார் !

15 போட்டிகளில் வென்ற வேகத்தில் வந்த ஜாவுர், முதல் பீரியடில் இரண்டு புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் 42 என்று முந்தி சென்றார். இரண்டாவது பீரியடில் ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்பட்டது. மாற்றா ரவிக்குமார் பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர்.

Update: 2021-08-05 12:30 GMT

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் ரஷ்யாவின் ஜாவுரிடம் 47 என தோல்வியை சந்தித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த மல்யுத்தம் ஆண்கள் 'பிரீஸ்டைல் 57' கிலோ பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா களமிறங்கினார். 

இதில் ரஷ்யாவை சேர்ந்த ஜாவுர் உகுவேவை 26 எதிர்கொண்டார். 6 நிமிட போட்டியில் தலா நிமிடம் கொண்ட இரு பீரியடு ஆக நடத்தப்பட்டது. கடையில் பங்கேற்ற 15 சர்வதேச தொடர்களில், 14 பதக்கம் வென்றவர் ஜாவுர். இவர் உலக சாம்பியன் என்பதால் இந்திய வீரர் ரவிக்குமார் மிக எச்சரிக்கையாக விளையாடினார்.

15 போட்டிகளில் வென்ற வேகத்தில் வந்த ஜாவுர், முதல் பீரியடில் இரண்டு புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் 42 என்று முந்தி சென்றார். இரண்டாவது பீரியடில் ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்பட்டது. மாற்றா ரவிக்குமார் பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர்.

ஒரு கட்டத்தில் ரவிக்குமார் 47 என்று பின்தங்கினார். கடைசியில் ரவிக்குமார் மீண்டும் வருவார் என்ற நிலையில் 47 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இந்தியா இதுவரை 5 பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source:Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2817000

Tags:    

Similar News