இங்கிலாந்து அணியை 134 ரன்களில் சுருட்டிய இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்!

இங்கிலாந்து அணியை 134 ரன்களில் சுருட்டிய இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்!

Update: 2021-02-14 19:57 GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் அடித்தது. இதில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே  67 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் அடித்திருந்தனர்.இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அறிமுக வீரர் அக்சர் படேல் மற்றும் இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வழக்கம் போல சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறிய கில் இம்முறை 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இரண்டாம்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி தற்போதுவரை 249 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்றைய போட்டி குறித்து கௌதம் கம்பீர் தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த வேண்டும் எனில் முக்கியமாக இரண்டு வீரர்களை இந்திய அணி கட்டுப்படுத்தவேண்டும். அவர்களில் ஒருவர் ஜோ ரூட். அவர் எந்த மைதானங்களிலும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்து அச்சுறுத்த கூடியவர். மற்றொருவர் சிப்லி. இவர் சமீப காலங்களில் நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக ஆசிய கண்டங்களில் இருக்கும் மைதானங்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து வருகிறார். ஆகையால் இவர்கள் இருவரையும் இந்திய அணி கட்டுப்படுத்த வேண்டும் என்று தனது கருத்தில் தெரிவித்திருக்கிறார்.

Similar News