இந்திய அணி அசத்தல்.. இங்கிலாந்து அணிக்கு 337 ரன்கள் இலக்கு.!
Indian-team-336-Run-against-england
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று (26-ம் தேதி) பகல் - இரவு ஆட்டமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து இந்தியா முதலில் விளையாடியது. தொடக்க வீரர்களான தவான் 4 ரன்னிலும் ரோகித் சர்மா 25 ரன்னிலும் வெளியேறினர்.
இந்நிலையில், விராட் கோலி ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது. விராட் கோலி 66 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து பண்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து, மறுமுனையில் ராகுல் 108 ரன்கள் இருக்கும் போது வெளியேறினார்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை சேர்ந்த டாம் கரண், லீஸ் டாப்லே 2 விக்கெட்டும் சாம் கரண், அடில் ரஷித் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினார்.