இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்: ஜிம்பாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!

ஜிம்பாவே அணியை வெற்றி கொண்டு இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

Update: 2022-11-07 00:42 GMT
இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்: ஜிம்பாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!

8வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் பன்னிரண்டு சுற்றுக்கும் வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் ஒன் லீக் சுற்றும் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் குரூப் 2 அணியில் இருந்து அரை இறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை என்பதை நிர்ணயிக்கும் கடைசி கட்ட ஆட்டம் இன்று நடந்தது.


இதில் இந்திய அணி ஜிம்பாவே சந்தித்தது. இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதியை எட்ட முடியும் அல்லது கைவிடப்பட்டால் அரை இறுதி முன்னேற்றத்திற்கான பிரச்சனை எதுவும் இருக்காது. இந்நிலையில் இந்திய அணி தற்போது இந்த போட்டியில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.


186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஜிம்பாவை அணி 115 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்தியா தற்போது அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. பாகிஸ்தான் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறானது என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்த, நிலையில் தற்போது அரை இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைகிறது என்பது அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News