முதல் டெஸ்ட் போட்டியில் கோலியின் ரன் அவுடால் இந்திய அணி தடுமாற்றம்.!
முதல் டெஸ்ட் போட்டியில் கோலியின் ரன் அவுடால் இந்திய அணி தடுமாற்றம்.!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணியில் பிரித்திவ் ஷா டக் அவுட் ஆகி வெளியேற பின்னர் வந்த புஜாரா நிலைத்து விளையாடினார். மயாங்க் அகர்வால் 17 ரன்னில் அவுட் ஆகி வெளியேற பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த வீராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்த நிலையில் புஜாரா 100 பந்துகள் சந்தித்து வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நொந்து செல்லும் அளவிற்கு பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
புஜாரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்வெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 28 இன்னிங்ஸில் 3609 பந்துகள் சந்தித்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சாதனையை முறியடித்துள்ளார்.
அதை தொடர்ந்து விளையாடிய புஜாரா 43 ரன்னில் அவுட் ஆக அடுத்து வீராட் கோலி அரைசதம் வீளாசிய நிலையில் 74 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேற இந்திய அணியின் ஆட்டம் சற்று தடுமாற தொடங்கியது ரஹானே 42 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஹனுமான் வீஹாரி 16 ரன்னில் அவுட் ஆக இந்திய அணி பேட்டிங் சொதப்பல் நிலையை அடைந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 233-6 ரன்கள் சேர்த்தது இந்திய அணி அஸ்வின் மற்றும் சாஹா களத்தில் உள்ளனர்.